வாஷிங்டன்: கொரோனாவால் அமெரிக்காவில் பெருமளவு பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் 104 வயதான இரண்டாம் உலகப்போர் மாஜிவீரர், கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் ஓர்கான் மாகாணத்தின் லிபனோன் நகரைச் சேர்ந்த வில்லியம் லாப்சீஸ்(104) இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த மார்ச் 10-ம் தேதி கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியானது.
தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், கடந்த புதன் கிழமை இவருக்கு 104-வது பிறந்த நாள் எனவும் வில்லியம் லாப்சீஸ், மகள் கரோலி ப்ரெளன் தெரிவித்தார்.
முன்னதாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்த மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.