பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை! இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

BARC) எனப்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் BARC Recruitment 2020 சைன்டிபிக் ஆபீசர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, சைன்டிபிக் ஆபீசர் குரூப் ஏ பதவிக்கு கேட் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. பயிற்சியில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெறும் விண்ணப்பதாரர்கள் மும்பை, கல்பாக்கம், இந்தூர், ஹைதராபாத் ஜதுகுடா ஆகிய இடங்களில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களில் பணியமர்த்தப்படுவர்.