இலங்கையின் புதிய அதிபராக அண்மையில்

பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுகள், சீனாவுக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை திரும்ப பெற உள்ளது.

இந்த மிக முக்கியமான தகவலை அவர், தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களை வியாழக்கிழமை (நேற்று) சந்தித்தபோது உறுதி செய்துள்ளார்.

கோத்தபய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதிகளில், "தான் ஆட்சி வந்தால் ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்" என்பது முக்கியமாக இடம்பெற்றிருந்தது.

இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.