கோத்தபய ராஜபக்ச சீனாவுக்கு வைத்துள்ள "ஆப்பு

இலங்கையில் உள்ள பிரபல ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிரடியாக அறிவித்துள்ளா


இலங்கை ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்காக இலங்கை அரசு முன்பு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

கடந்த 2017இல், அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

போர்க்கப்பல்களை நிறுத்தும் தளமாக இந்த துறைமுகத்தை சீனா பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கையும், சீனாவும் தொடர்ந்து செவிமடுக்காமல் இருந்து வந்தன.